தமிழக சட்டப்பேரவை கூட்டம், கொரோனா தொற்று பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள  சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறாமல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர்  அரங்கத்தின் 3வது மாடியில் தமிழக சட்டப்பேரவை  கூட்டம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கூடியது. முதல் நாளான நேற்று முன்தினம் 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடைபெற்றது. மறைந்த எம்எல்ஏக்கள் 23 பேருக்கு இரங்கல்  தெரிவிக்கப்பட்டு அவை அடுத்தநாள் நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றது. முதல்வர்  பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உரையாற்றினர்.

இதற்கிடையே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் ஊரடங்கை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்துக்கும் சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடையுள்ள நிலையில், மேலும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும், இன்னுடன் பேரவை முடியவுள்ளதால், பொதுமக்களின் முக்கியமாக கருதப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு சட்டத்திருத்த மசோதா (சென்னையில் மாநகர பேருந்து, ரயிலில் செல்ல ஒரே  பாஸ்) சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மசோதாவில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் மசோதா நிறைவேற்றப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதா நிறைவேறும் பட்சத்தில் சென்னையில் பணியாற்றுபவர்களுக்கு பயண செய்ய இந்த பாஸ் எதுவாக இருக்கும். இருப்பினும், சென்னை மாநகர பேருந்தில் மாதக்கட்டணம் ரூ.1000 உள்ளது. ஆனால், ரயிலில் அதிகப்பட்சமாகவே  மாதக்கட்டணம் ரூ.300-க்குள் உள்ள நிலையில் அரசு எப்படி சட்டத்திருத்தம் செய்யபோகிறது என்பது கேள்வி கூறியாக உள்ளது.

ஒரே பாஸ்:

கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதுவரை ரயிலில் பயணம் செய்ய  தனி பயண அட்டையும், மாநகர பேருந்தில் பயணம்  செய்ய தனி பயண  அட்டையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அனைவரும் பயன்பெறும் வகையில் பொதுவான பயண அட்டை  வழங்கப்படும் என தெரிவித்தார்.இதன்மூலம், பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லும் அலுவலர்கள்  என அனைவரும் பயன் பெறுவார்கள் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here