தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லாத போதும், மத்திய பட்ஜெட்டில் ஒரு குறையும் வைக்காமல் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை – தியாகராய நகரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ‘பொய்ப் பிரச்சாரம் செய்து அரசியல் செய்யும் சூழல் தான் நாட்டில் உள்ளது. கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாட்டை அழைத்துச் சென்று விடுகிறார்களா?மாடு விவசாயிகளிடம் தானே உள்ளது. இன்று இந்தியா தான் உலகில் பால் உற்பத்தியை நம்பர் 1 ஆக இருக்கிறது.

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என்று மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எவ்வாறு பதில் கூற முடியும்? விவசாயிகள் – கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் ஏற்பட்டால் தான் திட்டங்கள் தோல்வியை சந்திக்கும். விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை எங்கு விற்கலாம்? என்ன விலைக்கு விற்கலாம்? என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

விவசாயி பெயரைச் சொல்லிக்கொண்டு, எவ்வளவு பிரச்சாரங்கள்? தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு குறை வைக்காமல் செயலாற்றி வருபவர் தான் பிரதமர் மோடி. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வந்து குடும்பத்தினருடன் சேர்த்தது மோடி அரசு தான். பாஜக – அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here