கடலூரில் ராமலிங்கம் என்பவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரை பறிக்கக்கூடிய நிபா வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் கடந்தாண்டு 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்தாண்டு மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 23 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். நிபா அறிகுறியோடு உள்ள பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சுகாதார நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

கேரளாவில் நிபா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து கேரள- தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனாலும் தற்போது கடலூரில் ராமலிங்கம் என்பவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமலிங்கம் கேரளாவில் பணிபுரிந்துவிட்டு கடலூர் திரும்பிய நிலையில் அவருக்கு நிபா அறிகுறி இருப்பதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

நிபா வைரஸ் வவ்வால்களின் எச்சில், எச்சம் போன்றவற்றால் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் வவ்வால் கடித்த பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகளுக்கு அருகில் செல்வதையும், அவற்றை தொடுவதையும் தவிர்க்க வேண்டும். இதன்மூலம் நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here