தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக, தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் – முக ஸ்டாலின்

0
256

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக, தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும்,  முதல்வர் எடப்பாடி தலைமையில்  நல்லாட்சி நடைபெற்று வருகிறது என்று மத்தியஅரசு கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்திற்கு நல்லாட்சி விருது வழங்கி கவுரவித்தது.

மத்தியஅரசின் நல்லாட்சி விருது அறிவிப்புக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அப்போது விமர்சித்த ஸ்டாலின், தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது வழங்கப்பட்டிருப்பது கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது என்றார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரம ராஜா இல்ல  திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசிய ஸ்டாலின், , ”கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவர் என்றவர்,  மணமகன் மணமகள் இருவரும் வீட்டில், மத்திய – மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது, கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் தற்போது லஞ்சம், ஊழல், கமிஷன் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, அதிமுக ஆட்சி கொள்ளையடிக்கும் ஆட்சி, கமிஷன் வாங்கும் ஆட்சி என்றவர், இன்று எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை கொண்டு வந்தவர் பெரியாரையே விமர்சிக்கும் நிலை உருவாகி வருகிறது என்றவர்,

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாகவும்  முதலமைச்சர் அடிக்கடி கூறி வருகிறார். இந்த  விருது கொடுத்தவர்களைத்தான் கூட்டி வந்து  அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here