தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் எகிறிய மது விற்பனை

0
168

டாஸ்மாக் கடைகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) செயல்படாது என்பதால் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.189 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும்கட்டுப்பாட்டுடன் 7-வது கட்ட முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே இதற்குக் காரணம். இதனால் நேற்று மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ.188 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரையில் ரூ.44 கோடிக்கும், திருச்சியில் ரூ.42 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், கோவையில் ரூ.38 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த சனிக்கிழமை ரூ.177.17 கோடிக்கு மதுபானங்கள் விற்ற நிலையில் நேற்று ரூ.11.83 கோடி வசூல் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here