தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த ஆகும் செலவினம்: தேர்தல் ஆணையம் தகவல்

0
52

தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாஹு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த ரூ.621 கோடி செலவினம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தொகையை மாநில அரசிடம் கேட்டுள்ளோம். கொரோனா வைரஸ் காலம் என்பதால், செலவினம் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20 ஆம்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here