தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மெனு இதுதான்

The Rajiv Gandhi Government General Hospital (RGGGH) in Chennai has come up with a special menu for those in the COVID-19 isolation wards that includes both patients and those awaiting test results.

0
1051

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வகையிலான உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

காலை 7 மணி: இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது.
காலை 8.30 மணி: இரண்டு இட்லி, சாம்பார், வெங்காய சட்னி, சம்பா ரவை கோதுமை உப்மா, 2 வேகவைத்த முட்டை, பால், பழரசம்.
காலை 11 மணி: சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீரில் சிறிது உப்பை சேர்த்தும் கொடுக்கப்படுகிறது.
பகல் 1 மணி: இரண்டு சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேகவைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப்.
மாலை 3 மணி: மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தண்ணீர்.
மாலை 4 மணி: பருப்பு வகைகளில் மூக்கு கடடை சுண்டல் ஒரு கப்.
இரவு 7 மணி: 2 சப்பாத்தி, வெங்காய சட்னி, இட்லி அல்லது சம்பா ரவை கோதுமை உப்மா ஒரு முட்டை ஆகியவை கொடுக்கப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவு பொருட்கள் தொடர்ந்து 3 வேளையும் வழங்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here