தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாட்டில்  அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில்  ஓராண்டுக்குள் நிரப்பவும், பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக  நியமனம் செய்யப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகலுவை மானவை என்றும், இவர்களுக்கு மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டலோ தற்காலிமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். 

தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்வதற்கும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் ரூ.12,000 வரை சம்பளம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here