தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 1,288 வாகனங்கள் பறிமுதல்

0
128

இந்தியா முழுவதும், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இது ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில்  7 கட்டமாக ஊரடங்கு ஆகஸ்டு 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை அனுமதியின்றி வெளியே சுற்றியதாக,  6,61,299 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,288 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை  9,27,904 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,971 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,43,528 வழக்குகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,784 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுநாள் வரையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.19,42,72,598 அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.7,62,520 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here