சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23.01.2021 முதல் 26.01.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சங்கராபுரம், கடவனூரில் தலா 2, மூங்கில்துறைப்பட்டில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here