தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருவதால் நீதிமன்றங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

அதன்படி சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணைக்குத் தேவையான வழக்குரைஞர்கள் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 12,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here