தமிழகத்தில் இன்றைய(ஜன.13) கொரோனா நிலவரம்

0
62

தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) புதிதாக 673 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,28,287 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 192 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,242 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 821 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,09,392பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,653 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here