தமிழகத்தில் இன்று(ஜூன் 26) மருந்துக் கடைகள் மூடல்

0
166

தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார். 

இந்நிலையில் விசாரணைக் காவலில் இருவர் உயிரிழந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து, தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here