தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு (ஜூன்-26) இன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் இதுவரை 41,357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால்  (ஜூன்-26) இன்று மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 957-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 1,956 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* மதுரையில் இன்று ஒரேநாளில் மேலும் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1449ஆக அதிகரித்துள்ளது.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 4,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

* திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 169 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,254 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் இன்று மட்டும் 33,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,42,649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 55.42% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 46,046 ஆண்கள், 28,556 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here