தமிழகத்தில் இன்று(அக்.18) 56 பேர் கொரோனாவுக்கு பலி

0
69
File Image

தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,87,400 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில்மேலும் 56 பேர்(அரசு மருத்துவமனை -27, தனியார் மருத்துவமனை -29) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,642 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மேலும் 4,929 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,37,637 பேர் குணமடைந்துள்ளனர்.இதன்மூலம், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 39,121 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 90,286 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 89,46,566 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 66, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 126 என மொத்தம் 192 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here