தமிழகத்தில் இந்த இருண்ட ஆட்சி நீடிக்கவே மத்திய பாஜக அரசு விரும்புகிறது: ஸ்டாலின்

0
101

தமிழகத்தில் தற்போதுநடக்கும் இருண்ட ஆட்சி நீடிக்கவே மத்திய பாஜக. அரசு விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், 

தமிழகத்தில் இந்த இருண்ட ஆட்சி நீடிக்கவே மத்திய பாஜக அரசு விரும்புகிறது. இந்த நிலை இன்னும் 6 மாதங்கள் தான். அதன் பின் காட்சி மாறும். ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை திமுகவிற்கு தர தயாராக உள்ளனர். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, தொட்டு பார்க்கவோ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here