தமிழகத்தில் திருத்தணியில் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளது. கோடைகாலத்தில் இந்தாண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததது போலவே தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இன்று (ஏப்.30) அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, வேலூரில் 108 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில் 106; தருமபுரியில் 104; மதுரையில் 103; சென்னையில் 102 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 72.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்