தமிழகத்தில் சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து இந்த கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமை செயலக வளாகத்திற்குள் தனியார்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். நகரில் ஆங்காங்கே இரவு நேரத்தில் வாகன சோதனை நடத்தப்பட்டு, ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here