இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 49 நதிகள் மாசடைந்துள்ளதாக தேசிய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாயப்பட்டறைகள், ரசாயணக் கலவைகள் மனிதக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மருந்துப் பொருட்களின் கழிவுகள் போன்றைவகளால் நதி நீர் அதிகளவில் மாசடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கங்கை நதி அதிகளவில் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்.6இல் மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, இந்தியாவில் மாசடைந்த 302 நதிகள் மாசடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 49 நதிகள் மாசடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக அஸ்ஸாமில் 28 நதிகளும், மத்திய பிரதேசத்தில் 21 நதிகளும், குஜராத்தில் 20 நதிகளும், மேற்கு வங்கத்தில் 17 நதிகளும், உத்தரப் பிரதேசத்தில் 13 நதிகளும், ஒடிசாவில் 12 நதிகளும், கேரளாவில் 13 நதிகளும், கர்நாடகாவில் 15 நதிகளும் அதிகளவில் மாசடைந்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பவானி, பாலாறு, தாமிரபரணி, காவிரி, திருமணிமுத்தாறு, சரபங்கா மற்றும் வசிஸ்டா ஆகிய ஏழு நதிகள் மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நன்றி: indiaspend.com

உலகிலேயே மிகப் பெரிய கப்பல் Symphony of the Seas

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்