இந்தியாவின் வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்தின் வங்கி ஏடிஎம்களிலும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணமில்லாததால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பணம்திப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட நெருக்கடியைப் போன்றே தற்போதைய நிலையும் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்