தமிழக ஆளுநரின் ஆய்வு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடந்து இரண்டாவது நாளாக ஆளுநர், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தூய்மை இந்தியா’திட்டத்தின்கீழ் செயல்படும் பயோ டாய்லெட்டையும் ஆய்வு செய்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அமைச்சர்கள் ஆதரித்து வருகின்றனர். அதேநேரத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநரின் ஆய்வு என்னும் வியாதி தமிழகத்திலும் பரவியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: அறம் என்ற சத்கர்மம்: நயன்தாரா தோழரானது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்