புனேவில் இருந்து மேலும் நான்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.

தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்தும் 1 கோடியே 92 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதுவரை சுமார் 1 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். புனேவில் இருந்து விமானத்தில் வந்த 12 பெட்டிகளில் 1 லட்சத்து 44 ஆயிரம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதே விமானத்தில் 28 பெட்டிகளில் 3 லட்சத்து 36 ஆயிரம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிற்காக பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here