விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நிதிஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இது மோடி தலைமையில் நடைபெறும் மூன்றாவது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 30 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : காவல்நிலையத்தைச் சூறையாடிய பஜ்ரங்தள் அமைப்பினர்; போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், பயிர்க்காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 133 படகுகளைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும், அனைவரும் கல்வித் திட்டத்தின்கீழ் 1862 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீட்டில் ஒரே அளவீட்டை நிர்ணயம் செய்ய கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படியுங்கள் : ’நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை’: மாட்டு வண்டியில் சென்றவர்கள் மீது தாக்குதல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்