கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கடலூர் வேப்பூரில் 13, ஒகேனக்கல், மதுரையில் தலா 8 செ.மீ மழை பதிவானது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வரும் 14ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. சூறாவளி காற்று வீசும் என்பதால் அக்டோபர் 14 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்தாலும், மாலையில் மழை கொட்டுகிறது. ஒருசில இடங்களில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காலியிடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழையை வரவேற்கும் விதமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி உற்சாகமாக சென்றனர். சில இடங்களில் காற்றுடன் பெய்த மழையால் மரக்கிளைகளும் ஒடிந்தன. ஓரிரு பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here