போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜன.4ஆம் தேதி முதல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று) போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் ஆலோசனை நடத்திய தொழிற்சங்கத்தினர், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக வியாழக்கிழமை (நேற்று) அறிவித்தனர். வெள்ளிக்கிழமை (இன்று) காலை, அனைத்துத் தொழிலாளர்களும் பணிக்கு திரும்பியதையடுத்து, அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்