டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்குப் பிறகு இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலத்திற்குச் சென்ற அவர்கள் அங்குள்ள மசூதிகளுக்கும் சென்றனர். மக்களுடன் சகஜமாக உலா வந்தனர்.

அப்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டிருந்த நேரம். இதனால் பெரும்பாலான வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவ இவர்களும் ஒரு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. தொடர்புடையவர்களை கண்டறிய மாநில அரசுகள் கடும் சிரமப்பட்டன. வெளிநாட்டினர் அவர்களின் விசா விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை இந்திய அரசு கருப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது. அவர்கள் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here