தப்லீக் ஜமாத் விவகாரம்; முஸ்லிம்களை பழிதீர்க்க கொரோனா கிடைச்சாச்சு; வைரஸைவிட ஆபத்தானவர்கள் இவர்கள் – ஒமர்அப்துல்லா

Coronavirus: The former Jammu and Kashmir chief minister said those tweeting with hashtags like "Tablighi virus" are "more dangerous" that any virus nature can "conjure".

0
524

கொரோனாவைரஸ் பரவுவதற்கு காரணமே முஸ்லிம்கள்தான் என்று அபாண்டமாக பழி சொல்ல கூடாது என்று உமர் அப்துல்லா காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸையும், தப்லீக் ஜமாத்தையும் இணைத்து டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு டிவீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட ஆபத்தானவர்கள்… மனசு பூரா அவங்களுக்கு நோய்தான் என்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த பெரும் மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பரவுவதற்கான சாத்தியங்களுடன் நாடு முழுவதும் பரவியிருக்கும் தப்லீக் ஜமாத்தின் உறுப்பினர்கள் குறித்து மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறியும் பணி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது 

இதனிடையே கொரோனாவைரஸ் தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தக்லிப் ஜமாத்தில் நடந்த விஷயத்தையும், கொரோனா தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி சிலர் சோஷியல் மீடியாவிலும் விஷமப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக தக்லிம் ஜமாத் சார்பில் மவுலானாவும் விளக்கம் தந்திருந்தார்.

எனினும் அவதூறுகள் தங்கள் மீது தொடர்ந்து பரபரப்படுவதாக இஸ்லாமியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக, இஸ்லாமிய பிரமுகர்கள் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லாவும் வன்மையான கண்டனத்தை ட்விட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார் . 

டெல்லி நிஜாமுதீனில் தக்லிப் ஜமாத்தில் நடந்த சம்பவம், உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று நோயை உருவாக்கி, முஸ்லிம்கள்தான் பரப்புகிறார்கள் என்று அவர்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்த வசதியான காரணமாகி விட்டது. நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அபாண்டமாக பழி சொல்ல கூடாது.

கொரோனாவைரஸை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லீம்கள்தான் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அரசின் விதிமுறைகளை, ஆலோசனைகளை, அறிவுரைகளை மற்ற அனைவரையும் போல் கடைப்பிடித்து நடப்பவர்கள். 

கொரோனா வைரஸையும், தக்லிப் ஜமாத்தையும் இணைத்து டிவிட்டரில் ஹேஷ்டேக் வைத்து டிவீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட மிகவும் ஆபத்தானவர்கள்… அவர்களின் உடம்பு நல்லா இருந்தாலும்.. மனசு முழுவதும் நோய்தான் நிரம்பியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார் ஒமர் அப்துல்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here