தப்லிக் ஜமாத் மாநாடு;கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிளாஸ்மா வழங்க முன்வந்த முஸ்லிம்கள் ; வெறுப்பை வெல்லும் மனிதநேயம்

Mohammed Abdul Ali, the Nawab of Arcot said the fact that many have voluntarily come forward to donate shows that they never intended to deliberately spread the virus.

0
746

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல வகையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்க மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.

 பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனாவை ஒழிக்கும் முறையை சோதனை செய்ய பல மாநில மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் இருந்து ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எடுக்கப்பட்டு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உடலில் செலுத்தப்படும்.

 கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், இந்த வைரஸை எதிர்க்கும் திறன் கொண்ட எதிர் அணுக்கள் அல்லது பிளாஸ்மா இருக்கும். இந்த எதிர் அணுக்களை எடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தும் போது அவரது உடலில் உள்ள வைரஸ் தொற்றை அழிக்க முடியும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து விடுவார்.

இதற்காக ஒருவரின் உடலில் இருந்து 800 மி.லி. பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படும். ஒரு கொரோனா நோயாளிக்கு 200 மி.லி. அளவு பிளாஸ்மாதான் செலுத்தப்படும். குணமடைந்த நோயாளி ஒருவரிடம் இருந்து எடுக்கும் பிளாஸ்மாவை நான்கு நோயாளிகளுக்கு செலுத்தி குணமாக்க முடியும்.

இந்த பரிசோதனை முயற்சியை கேரளா மாநில அரசு 2 மருத்துவமனைகளில் தொடங்கி விட்டது. இந்த பிளாஸ்மாவை நோயாளிக்கு செலுத்தும்போது, பலருக்கு சரியாகியுள்ளது. இந்நிலையில் இந்த முறையை தமிழகத்தில் செயல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 குணமடைந்தவர்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா பரிசோதனைக்கு தங்களது அணுக்கள் அளிக்கவேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. குணமடைந்த பலர் தயக்கம் காட்டிய நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த முஸ்லிம்கள்  பலர் சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இதுதொடர்பாக தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி, திருப்பூரைச் சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர்கள் ஊநீர் தானம் செய்ய முன்வந்துள்ளனர். இதுகுறித்து வெளியான வீடியோவில் பேசிய அவர்கள், “நாங்கள் இப்போது பூரணமாக குணமந்துவிட்டோம். இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என கோரியிருந்தது.

அதற்கு தான் மட்டுமல்லாது தங்களுடன் மாநாட்டுக்கு வந்து பாதிக்கப்பட்டு தற்போது குணமந்தடைந்த அனைவரும் பிளாஸ்மாவை தர முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்டு அரசு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும் என அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களை குறி வைத்து வெறுப்பு  கருத்துப் பரப்பி வந்தனர் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் . அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை முஸ்லிம்களின் மனிதநேயம் வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here