தப்ரேஷ் அன்சாரி அடித்து கொல்லப்படவில்லை; மாரடைப்பால் இறந்தார்; 11 குற்றவாளிகளை விடுவித்த போலீஸார்

0
460

தப்ரேஷ் அன்சாரியை அடித்துக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஜார்க்கண்ட் போலீஸ் விடுவித்திருக்கிறது. தப்ரேஷ் அன்சாரி மாரடைப்பால்தான் இறந்தார் என்று போலீஸ் கூறியுள்ளது.  

24 வயது சாம்ஸ் தப்ரேஷ் அன்சாரி , திருடியதாக கூறி பிடித்தக் கும்பல் , அவரை கம்பத்தில் கட்டி வைத்து 7 மணி நேரத்துக்கும் மேலாக அடித்து ஜெய் ஶ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று கூறச் சொல்லி  அவர் நினைவிழந்தப் பிறகு  போலீஸில் ஒப்படைத்தது . 

உடற்கூறாய்வு அறிக்கையில் தப்ரேஷ் அன்சாரி மாரடைப்பால் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் காரணம் காட்டி கைதான 11 பேரையும் ஜார்க்கண்ட் போலீஸ் விடுவித்திருக்கிறது. 

IPC section 304 இன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். தப்ரேஷ் அன்சாரி சம்பவ இடத்தில் இறக்கவில்லை. அவரைக் கொல்ல வேண்டும் என்று கிராம மக்கள் நினைக்கவில்லை. மருத்துவ அறிக்கையில் கொலை என்று பதியப்படவில்லை. மருத்துவ அறிக்கையில் மார்டைப்பால் இறந்திருக்கிறார் என்றும் தப்ரேஷ் அன்சாரியின் தலையில் ஏற்பட்ட ரத்தகசிவு உயிருக்கு ஆபத்தானது இல்லை. தப்ரேஷ் அன்சாரியின் இறப்புக்கு காரணம் மாரடைப்பும் தலையில் ஏற்பட்ட ரத்த கசிவும்தான் காரணம் என்று ஒரு மருத்துவ அறிக்கை கூறுகிறது என்று சரைகேலா கர்சவான் எஸ்பி கார்த்திக் தெ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். 

தப்ரேஷ் அன்சாரி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே போலீஸின் நட்வடிக்கைகள் சரியில்லை. அன்சாரியை கைது செய்த போலீஸ் அவரை அடித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தப்ரேஷ் அன்சாரி இறந்த பிறகுதான் அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அடித்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. அடிபட்டிருந்த தப்ரேஷ் அன்சாரிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போலீஸ் மறூத்துள்ளது என்றூம் போலீஸார் தப்ரேஷ் அன்சாரியின் குடும்பத்தை மிரட்டியிருக்கிறார்கள் என்றூம் ஜார்க்கண்டில் இருக்கும் உண்மை அறியும் குழு ஜனாதிகர் மகாசபா கண்டறிந்துள்ளது.  

தப்ரேஷ் அன்சாரியை அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்தே போலீஸ் நடவடிக்கை எடுத்தது. மாவட்ட நிர்வாகம் அமைத்த விசாரணைக் குழுவும் போலீஸின் நடவடிக்கை சரியில்லை என்றே கூறியுள்ளது. 

தப்ரேஷ் அன்சாரியின் தலையில் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார் என்று  அன்சாரியின் குடும்பம்  என் டி டிவியிடம் கூறியுள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியும் உடற்கூறாய்வில் தலையில் ஏற்பட்டிருந்த கடுமையான காயம் இறப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறுகிறது.   

ஆனால் கடைசியாக வந்த உடற்கூறாய்வு அறிக்கையை  காட்டி 11 பேரையும் விடுவித்துள்ளனர் ஜார்க்கண்ட் போலீஸார். 

ஜார்க்கண்டில் சாம்ஸ் தப்ரேஷ் இரு சக்கர வாகனத்தைத் திருடியதாக கூறி ஒரு கும்பல் அவரை  பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததால் அவர்  உயிரிழந்தார்.  சாம்ஸ் தப்ரேஷ் திருடியதாக கூறி ஒரு கும்பல் அவரை  செவ்வாய்க்கிழமை பிடித்தது. பின்பு கம்பத்தில் கட்டிவைத்து 7  மணி நேரத்துக்கும் மேலாக அடித்தது அக்கும்பல். அடிக்கும்போது ஜெய்ஶ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று கூறச் சொல்லி அடித்ததாக கூறப்படுகிறது. நினைவிழந்த பிறகு அவரை போலீசாரிடம்  ஒப்படைத்தது அக்கும்பல். போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமத்திருக்கிறார்கள். பின்பு சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

 

http://thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here