நடிகை தப்பு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார். அடுத்தடுத்து இரு தெலுங்குப் படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இந்தியின் திறமைமிக்க நடிகைகளில் தபுவும் ஒருவர். பேரிளம் வயதை நெருங்கும் நிலையிலும் தபுவின் இளமை கலையவில்லை. அதேபோல் மணமும் ஆகவில்லை. எப்போதாவது சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருந்தவர் சமீபத்தில் அந்தாதுன் படத்தில் நடித்தார். ஏறக்குறைய அழகிய ராட்சஸி (வில்லி) வேடம். நடிப்பில் அசத்தியிருந்தார்.

அந்த இந்திப் படத்தைத் தொடர்ந்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதனை தொடர்ந்து ராணா, சாய் பல்லவி நடிக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

திறமையான நடிகை தபு. அவரை தெலுங்கு சினிமா பயன்படுத்துகிறது. தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் ஏன் பாராமும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here