தமிழில் தபால் துறை தேர்வு என்பது இந்த ஆண்டுக்கு மட்டுமா? வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தபால் துறை தேர்வுகள் இனி பிராந்திய மொழிகளில் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரசன் தொடர்ந்த வழக்கில், ஜூலை 23ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தபால் துறை தேர்வுகள் இனி பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்ததோடு, கடந்த 14ம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தபால் துறை தேர்வுகள் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? வரும் ஆண்டுகளிலும் தொடருமா? எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழும் இடம்பெற்றிருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தபால் துறைத் தேர்வுகளை எழுதலாம் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

தமிழ் மொழியில் நடத்தப்படாத தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தபால் துறை மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான தேர்வை ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் திங்கள்கிழமை வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடியதும், இந்த விவகாரத்தை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்பட அக்கட்சி உறுப்பினர்களும் , திமுக உறுப்பினர்களும் எழுப்பினர். அண்மையில் ஆங்கிலம், ஹிந்தி வினாக்களில் நடத்தப்பட்ட தபால்காரர் மற்றும் இதர பணியிடங்களுக்கான தபால் துறைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் புதிதாக தேர்வு நடத்தப்படுவதுடன் அதில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

கடும் அமளிக்குப் பிறகு மத்திய தொலைத் தொடர்புத் துறைத் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவையில் பதில் அளித்துப் பேசியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தேன். இதைத்தொடர்ந்து, 14.7.2019-இல் நடத்தப்பட்ட தபால் துறைத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தபால்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தபால் துறையின் 15.5.2019-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் மதிப்பு அளித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த தேசத்திற்கும், இந்த அவைக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நான் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது தமிழின் ஆழத்தையும், அனைத்து இதர மொழிகளையும் கடந்து வந்துள்ளேன்  என்றார்.

தமிழக எம்.பி.க்கள் நன்றி: இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் அதிமுக உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் அவையில் நன்றி தெரிவித்து பேசினர்.

14-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து
தபால் துறையில் கிராமப்புறங்களில் பணிபுரியும் கடைநிலை  ஊழியர்கள், எழுத்தராகப் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. 

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. ஏற்கெனவே பணியாற்றி வரும் 989 பேர் பதவி உயர்வு, பணி நிரந்தரம் பெறுவதற்காக இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் 1,200 பங்கேற்றனர். 150 மதிப்பெண்களை கொண்ட தேர்வு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here