வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. அதையடுத்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

வடசென்னை வெற்றிமாறனின் கனவுப்படம். பல வருடங்கள் நீளும் கதை என்பதால் மூன்று பாகங்களாக படத்தை எடுக்கின்றனர். முதல்பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகத்துக்கான கதையில் 20 சதவீதம் இப்போதே எடுக்கப்பட்டுவிட்டது. மீதி 80 சதவீதத்தை அடுத்த வருடம் முடிக்க உள்ளனர். வடசென்னை இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும்.

இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும்முன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிக்கிறார். வடசென்னைக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு வாரங்களுக்குள் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றார் தனுஷ்.

வடசென்னை படத்தின் நீளம் மற்றும் பட்ஜெட் காரணமாக பல வருடங்கள் அந்தக்கதை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த காலத்தில் தனுஷை வைத்து படம் இயக்க பல கதைகள் உருவாக்கினார் வெற்றிமாறன். அதில் ஒன்று சூதாடி. தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய படம் அனேகமாக சூதாடியாக இருக்கலாம் என்கின்றன தகவல்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்