நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை விகிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் -செல்வராகவன் – யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
தற்போது தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன், எடிட்டராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானேவருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து
செல்வராகவன் படத்துக்குத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.