தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் : இந்திய ரயில்வே ஆலோசனை

The Railways is contemplating offering its coaches and cabins as isolation wards for patients found positive for coronavirus, sources said Wednesday.

0
159

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.

இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக, அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சருடன்  நடைபெற்ற ஆலாசனையில், காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை, கொரோனாவுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றுவது குறித்து பரிசீலித்தனர். மேலும், கொரோனா சிகிச்சைக்கு உதவும் வென்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளை அழைத்து செல்வதற்கான டிராலிகள் உள்ளிட்ட மருத்துவத் துறையின் அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை ஆராயும்படி பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ரயில்வே அமைச்சகம் சார்பில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது.

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் மூன்று படுக்கை வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இரு படுக்கைகளையாவது ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here