தனது காருக்கு தானே தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் எரித்ததாக நாடகம் – பாஜக மாவட்ட செயலாளர் கைது

0
207

சென்னை மாவட்டம் மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1 ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்பவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக  உள்ளார். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்துள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது பதிவாகியிருந்திருக்கிறது.

இதையும்  படியுங்கள்👇

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரை விற்று நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்து விட்டதாக காவல்துறையிடம் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285 தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சதீஸ்குமாரை எச்சரித்துள்ள காவல்துறை, அவரை காவல்நிலைய பிணையில் அனுப்பி வைத்துள்ளனர்.

 https://www.aransei.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here