தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேர் பெயரை வெளியிட்ட மலையாள நடிகை

0
305

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத். 27 வயதான இவர் கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவரது மிகப் பெரிய படைப்புகளில் வாஃப்ட் என்ற குறும்படம் அடங்கும். இந்த் குறும்படம் அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 2019-ல் ‘பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார்.

இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், “இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக, உணர்வுரீதியாக, துன்புறுத்தியவர்கள். இந்தக் குற்றவாளிகளின் லிஸ்ட் இதோ” என்கிற ரேவதி 14 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

 1. ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
 2. சித்திக் (நடிகர்)
 3. ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்)
 4. சிஜூ (நடிகர்)
 5. அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
 6. அஜய் பிரபாகர் (டாக்டர்)
 7. எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்)
 8. சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர் )
 9. நந்து அசோகன் ( டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்)
 10. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
 11. ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்)
 12. ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்)
 13. சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட், வலியத்துரா)
 14. பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்)”

என்று ரேவதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here