கொரோனா கட்டப்பாட்டு ஊரடங்குக்கு மத்தியில் பீகாரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி 15 வயது சிறுமி ஜோதி குமாரி, கொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்துள்ளார்.

அவருடைய பாசம் மற்றும் வலிமையை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் மத்திய, மாநில அரசுக்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சிறுமி ஜோதி குமாரி சைக்கிள் மிதிக்கும் காட்இவாங்கா ட்ரம்ப் பதிவிட்ட கருத்தில் “ 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அவருடய அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை இந்திய மக்களையும், சைக்கிள்பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” என தெரிவித்து உள்ளார்.

அவருடைய இந்த டுவிட்டர் பதிவுக்கு கீழே பலரும் விமர்சனங்களை பதிவு செய்து உள்ளனர்.

livemint பத்திரிக்கையின் நியூயார்க் செய்தியாளர் சலில் திரிபாதி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விரைவில் இவாங்கா டிரம்ப் பட்டினியால் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எடை குறைப்புக்கான பரிசுகளை வழங்குவார் என விமர்சனம் செய்துள்ளார். பலரும் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவாங்கா டிரம்புக்கு பதில் அளித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல-மந்திரி உமர் அப்துல்லா பதிவிட்ட கருத்தில் “ 15வயது சிறுமி ஜோதி 1,200 கி.மீ பயணித்ததை போன்று சிறுமியின் வறுமையும், விரக்தியும் புனிதப்படுத்தப்படுகின்றன. அவளுக்கு உதவ மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது, அவளுடைய சாதனையை மட்டும் வெறுமையாக போற்றுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here