பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் 20 வாரக் கருவைக் கலைக்க அனுமதியளிக்க வேண்டும் என முதுகலை பட்டப்படிப்பு மருத்துவ அறிவியல் நிறுவனம் (Post-Graduate Institute of Medical Sciences) நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : 25 ஆண்டுகளைக் கடந்த உலகின் முதல் பெண் பயணிகள் ரயில் சேவை

இதுகுறித்து பி.ஜி.ஐ.எம்.எஸ் மருத்துவர் பிரசாந்த் குமார், “பாதிக்கப்பட்டவரின் கர்ப்பம் 20 வாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் 20 வாரங்களுக்கு மேல் சென்றால் கருக்கலைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஆனால் தாயின் வயது காரணமாக பிரசவ நேரத்தில் தாய்க்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார். மேலும் தற்போது கருக்கலைப்பு செய்தாலும் ஆபத்து மற்றும் பிரசவத்தின் போது ஆபத்து இருக்கக்கூடும் எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்; 2 பேர் பலி; 50 பள்ளிகள் மூடல்

பீகாரில் 10 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தையால் பலமுறை கற்பழிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது தாயாரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளியான இவர், தனது மகளை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த அதிர்ச்சியான உண்மை வெளிவந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : சிம்பு படத்தில் கௌரவ தோற்றத்தில் ஜீ.வி.பிரகாஷ்

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், மருத்துவர் ராஜ் சிங் சங்வான், “தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்