இந்திய இரயில்வேயின் தட்கல் பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி (irctc) இணையத்தளத்திலும், இரயில் நிலையங்களிலும் பெற்று கொள்ளலாம். முதல் ஏசி, எக்ஸிக்யூட்டிவ் வகுப்புகளைத் தவிர, அனைத்து இரயில் வகுப்புகளுக்கும் தட்கல் பயணச்சீட்டுகள் புக்கிங் செய்யலாம். ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல், ஏசி இல்லா வகுப்புகளுக்கு காலை 11 மணி முதல் தட்கல் பயணச்சீட்டிற்கான புக்கிங் செய்யப்படுகின்றன. பயண தேதிக்கு ஒரு நாள் முன்னர் தட்கல் பயணச்சீட்டு புக்கிங் செய்ய வேண்டும் என்று இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது.

Screen Shot 2018-07-16 at 6.10.31 PM

*சதவித அளவில் தட்கல் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு கட்டணத்தில் இருந்து 10 சதவிதமும், மற்ற வகுப்பு கட்டணத்தில் இருந்து 30 சதவிதமும் தட்கல் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது.

* சாதரண நேரத்திலும், பயணச்சீட்டிற்கான தேவை அதிகமான நேரங்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

*சதாப்தி எக்ஸ்பிரஸ்களின் எக்ஸிக்யூட்டிவ் வகுப்பிலும், தட்கல் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 5 சீட்டுகள் தட்கலுக்காக ஒதுக்கப்படுகின்றன என்று இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.

*அதிகபட்சமாக நான்கு நபர்களுக்கு மட்டுமே தட்கலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய அனுமதி உள்ளது. பயணிகள் பெயர் பதிவு செய்ய வேண்டும்

*ஒரு நாளிற்கு, ஒரு இரயிலில் ஒரு தட்கல் பயணச்சீட்டு மட்டுமே ஐஆர்சிடிசியின் வலை சேவை முகவர்களால் பதிவு செய்ய முடியும்.

*தட்கல் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய அனுமதியில்லை.

*காத்திருப்போர் பட்டியலில் இருக்க கூடிய பயணச்சீட்டுகளுக்கு டெபாசிட் ரசீது அளிக்கப்படுவதில்லை.

*தட்கல் பயணச்சீட்டுகளின் நகல் அளிக்கப்படுவதில்லை என இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது.

*பயண தூரத்திற்கான அளவிலேயே தட்கல் பயணச்சீட்டு அளிக்கப்படுகிறது.

*தட்கல் பயணச்சீட்டு முன்பதிவின் போது, பயணம் செய்பவர்களின் ஒருவரது அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது என இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்