வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு உலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின்மனப்பான்மையை அறிவதற்காக ஒரு ஆய்வொன்றை நடத்தியது.

இந்த ஆய்வில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள்
நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்து மிகவும் குறைவான நம்பகத்தன்மையை பதிவு செய்துள்ளனர்.

ஐநாவின் சுகாதார நிறுவனம் உலகளவில் சுகாதாரத் துறைக்கு இருக்கும் முக்கியமான 10அச்சுறுத்தல்களாக குறிப்பிட்டுள்ளவற்றில், மக்களுக்கு தடுப்பூசியைபோட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்கள் சிறிதளவு நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா என்று கேட்டபோது,

  • 79% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்புவதாக தெரிவித்தனர்.
  • 7% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்பவில்லை.
  • 17% பேர் தெளிவான ஒரு பதிலைக் கூறவில்லை.

தடுப்பூசிகள் வேலை செய்ததாக நம்பினார்களா என்று கேட்டபோது,

  • 84% பேர் சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நம்புவதாக தெரிவித்தனர்.
  • 5% சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நிராகரித்தனர்.
  • 12% பேர் தெளிவான ஒரு பதிலைக் கூறவில்லை.
  • இது ஏன் முக்கியமானது?

தட்டம்மைபோன்ற கொடிய தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பாகும் என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன.

உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களைப் தடுப்பூசிகள் பாதுகாக்கின்றன. பெரியம்மை எனும்நோயிலிருந்து உலகம் முற்றிலுமாக விடுபட்டுள்ளது. போலியோ போன்ற நோயிலிருந்து மக்களை முற்றிலுமாக விடுவிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளது.

ஆனால் தவறான தகவல்களால் மக்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை பயந்து கொண்டு தவிர்ப்பதால் அம்மை போன்ற வேறு சில நோய்கள் மீண்டும் மக்களைத் தாக்குகின்றது என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஐநாவின் உலக சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆன் லிண்ட்ஸ்ட்ராண்ட் இது குறைத்துக் கூறியபோது “தற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளது என்றார்.

மேலும்”தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் உலகம் கண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றத்தை, தடுப்பூசியை போட்டுக்கொள்வதிலுள்ள தயக்கம் மட்டுப்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார்.

“உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கும் சில நோய்கள் மீண்டும் தலைத தூக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத பின்னடைவு.”

தட்டமையின் நிலவரம் என்ன?

தட்டமையை முற்றிலுமாக நீக்கும் நிலையை நெருங்கிய பல நாடுகளில் திடீர் பின்னடைவுஏற்பட்டுள்ளது.எந்த காரணத்திற்காகவும் தடுப்பூசி போடுவதை தவிர்க்க நினைத்தால் அதுஅச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும். பெருமளவில் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் போது,அது மேலும் தட்டமையை பரவுவதை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த பகுதியில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது?

அதிக வருமானத்தை கொண்டவர்கள் வசிக்கும் இடங்களில் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை உருவாகி வருகிறது.

எடுத்துக்காட்டாக, இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் தடுப்பூசியை நம்புவதில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்பூசிகள் மீதான குறைந்த நம்பகத்தன்மை கொண்ட நாடாக பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.

இதன் காரணமாக, அந்நாட்டு அரசாங்கம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து எட்டாக உயர்த்தியுள்ளது.அதே போன்று, பிரான்ஸுன் அண்டை நாடான இத்தாலியில் நோய்த் தாக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அந்நாட்டு அரசாங்கம், தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளியில் படிப்பதை தடைசெய்யவும் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தடை விதிக்கவும் ஒரு சட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. இத்தாலியில் 76 சதவீத மக்கள் தடுப்பூசிகளை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு, 2019ஆம் ஆண்டின் முதல் பாதி வரை, அமெரிக்காவில் உள்ள 26 மாநிலங்களில் 980 தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவிலும், வட மற்றும் தென் ஐரோப்பாவிலும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் தடுப்பூசி மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்கு ஐரோப்பாவில் 59% மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 50% பேர்தான் தடுப்பூசி மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐரோப்பியாவில் அதிக பட்சமாக 53,218 தட்டம்மை பாதிப்புகளை பதிவு செய்தது உக்ரைன் நாட்டு மக்கள் தான். அத்துடன், தடுப்பூசிகள் மேல் 50 சதவீத நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நம்பகத்தன்மை மிக்க பகுதிகள்

இந்த கருத்துக்கணிப்பின்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக தெற்காசியாவை சேர்ந்த 95 சதவீத மக்களும், அதற்கடுத்தபடியாக 92 சதவீதத்துடன் கிழக்கு ஆப்ஃரிக்காவும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பல சவால்கள் இருந்தபோதிலும் வங்கதேசமும், ருவாண்டாவும் மக்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்று மிக உயர்ந்த நோய்த்தடுப்பு விகிதங்களை அடைந்துள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றான ருவாண்டா இளம்பெண்களை கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்கியதில் உலகின் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையின் நிலவரம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்ட இதே கருத்துக்கணிபில், 95 சதவீத இந்தியர்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 98 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 91 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், இலங்கையில் 95 சதவீத்தினர் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 95 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 95 சதவீத பெற்றோர்களும் கூறினர்.

மக்களை அச்சமடைய வைப்பது எது?

இந்த கருத்துக்கணிப்பின் மூலம், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே ஏன் நம்பிக்கை குறைந்துள்ளது என குறிப்பிட்ட எந்த ஒரு காரணமும் இந்த கருத்துக்கணிப்பின் வாயிலாக அறியப்படவில்லை.

அனைத்து விதமான மருந்துகளும் பக்கவிளைவுகளை கொண்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், இணையதளம் வாயிலாக பரப்பப்பட்ட போலிச் செய்திகள் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“தடுப்பூசிகள்குறித்த மக்களிடையேயான தயக்கத்தையும், அச்சத்தையும் போக்குவதற்கு மக்களின்அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதிலளிக்க தெரிந்த மருத்துவபணியாளர்களே மிகவும் அவசியம்” என்கிறார் மருத்துவர் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here