நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். இதையறிந்த விஜய் ரசிகர்களை சந்திப்பதற்காக வந்தார்.

ரசிகர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே விஜய் அருகில் சென்ற போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விஜய்யை பார்க்க தடுப்பு வேலியைத் தாண்டி வர முற்பட்டனர். அப்போது அந்த தடுப்பு வேலி திடீரென சரிந்து விழுந்தது. திடீரென வேலி சரிந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சிக்குள்ளான விஜய், பின்னர் அந்த வேலி கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தார். விஜய்க்கு அவரது உதவியாளர்கள் உதவிசெய்ய, வேலி கீழே விழாதபடி தடுக்கப்பட்டதுடன் தன் ரசிகர்களையும் விஜய் காப்பாற்றினார்.

இதையடுத்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ரசிகர்களை நடிகர் விஜய் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here