22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே செல்வதால் பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கல்யாண கனவுகளோடு காத்திருந்தவர்களுக்கு தங்கத்தின் தொடர் விலை ஏற்றம் அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸும் தங்கத்தின் தொடர் விலையேற்றத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன.

ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  

இதன் எதிரொலியாக  சென்னையில் (மார்ச் 4 ) இன்று காலை நிலவரப்படி (4-3-2020),ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ரூ4.153-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,600 குறைந்து ரூ.50,100-க்கு விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here