கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (டிசம்பர் 27) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 18 ரூபாய் உயர்ந்து 3,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,692 ஆக இருந்தது.

அதேபோல, 29,536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (டிச-27)  இன்று 29,680 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

24 கேரட் தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்துள்ளது. (டிச-27) இன்று அதன் விலை ரூ.3,895 ஆக இருக்கிறது. (டிச-26) நேற்று 3,877 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 31,016 ரூபாயிலிருந்து (டிச-27) இன்று 31,160 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. தூய தங்கத்தின் விலையும் 144 ரூபாய் உயர்ந்துள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,747 ஆகவும், டெல்லியில் ரூ.3,749 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,779 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,704 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,630 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,705 ஆகவும், ஒசூரில் ரூ.3,701 ஆகவும், கேரளாவில் ரூ.3,582 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளியின் விலை (டிச-27) இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.30 ஆக இருக்கிறது. நேற்று 50.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,300 ஆக இருக்கிறது.

—————————————————————————————–
—————————————————————————————–

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here