தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். ஏதோ ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தியாக நேற்று தங்கம் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. (23/11/2021) நேற்று தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 768 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 36 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள்:👇

.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.17 குறைந்து ரூ.4500க்கு விற்பனையாகிறது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 632 ரூபாய் குறைந்து 36,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.60 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 67,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறைந்த பின்னர் வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here