சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 குறைந்து ரூ.3,597க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் உயர்வைக் கண்டு வந்த தங்கம் விலை சில வாரங்களாக இறங்குமுகத்தை எதிர்கொண்டுள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத்தொடங்கியது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், செப்டம்பம் மாத தொடக்கத்தில் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தில் பவுன் ரூ. 30 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து,  தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,344 வரை குறைந்துள்ளது.

வெள்ளி விலையும், தங்கம் விலை போல இறங்குமுகமாகவே உள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1.70 குறைந்து ரூ.50.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.