சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து சவரன் ரூ.33,088-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ. 4,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.49.90-க்கு விற்பனையாகி வருகிறது.

*சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்தில்தான் ஆபரண தங்கம் சென்னையில் சவரன் 31,000ஐ தாண்டியது.

*ஜனவரி மாத துவக்கத்தில் தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு 1,280 உயர்ந்தது. பின்னர், அடுத்தடுத்து சரிவை சந்தித்ததால், அந்த மாத இறுதியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

*ஆனால், கடந்த மாதம் தங்கம் விலை நிலையாகவே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. கடந்த மாதம் 18ம் தேதியில் தொடங்கி 6 நாட்களிலேயே சவரனுக்கு 2,112 அதிகரித்தது. அதிகபட்ச உச்சமாக கடந்த மாதம் 24ம் தேதி ஒரு சவரன் தங்கம் சவரனுக்கு 752 அதிகரித்து 33,328க்கு விற்கப்பட்டது.

*பின்னர், கடந்த 25ம் தேதி சவரனுக்கு 592 சரிந்தது. இதுபோல் கடந்த மாதம் 29ம் தேதி அதிகபட்சமாக சவரனுக்கு 624 குறைந்தது.

*சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே, சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

*இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வருகிறது. அதோடு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை 0.5 சதவீதம் குறைத்ததால் தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

*மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73க்கு மேல் சரிந்தது. இதனால், இந்தியாவில் தங்கத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

* இந்நிலையில் ஆபரண தங்கம் சென்னையில் (மார்ச் 4) நேற்று சவரனுக்கு 824 உயர்ந்து, 33,024க்கு விற்கப்பட்டது. அது போல் (மார்ச் 5)இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து சவரன் ரூ.33,088-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here