சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.34,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 11 உயர்ந்து, ரூ.4,345- க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு உயர்ந்து ரூ.71.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகமும் மிகவும் அதிகம். அதற்கேற்ப தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாகவே உள்ளது. சென்னையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இந்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை இந்திய சந்தையில் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,345 ரூபாய்க்கும் ஒரு சவரன் 34,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விளையும் சற்று அதிகரித்துள்ளது. இன்று வெள்ளி ஒருகிராம் 71 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 70,500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, தற்போது 800 ரூபாய் விலை அதிகரித்து 71,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த இரண்டு நாட்கள் தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here