சென்னையில் (அக்டோபர்- 20) இன்றைய தங்கத்தின் நிலவரம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

உலகில் ஆசிய நாடுகளில்தான் குறிப்பாக, இந்தியாவிலும் சீனாவிலும்தான் தங்க நகைகளில் பெரிய அளவில் முதலீடு செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இந்த இரு நாடுகளிலுமே தங்கத்தின் இறக்குமதி குறைந்திருக்கிறது. நுகர்வு குறைந்தபோதும்கூட தங்கத்தின் விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து, தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது.

இதனையடுத்து, இன்றைய தங்கத்தின் நிலவரம்,  சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 குறைந்து ரூ.4,670-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களின் மத்தியில் சிறுகுறு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here