கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்த தங்க விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து நேற்று முன் தினம் சுமார் ரூ.31 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்திலிருந்தது. அதன் பிறகு (ஜன-7) நேற்று தங்க விலை சற்று குறைந்ததால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து உயர்ந்துள்ளது.

(ஜன-8) இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,929க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.31,432க்கு விற்கப்படுகிறது.

saf-5dba72f0c3c43

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.60க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,400 உயர்ந்து  ஒரு கிலோ வெள்ளி ரூ.52,600க்கு விற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here