தங்கம் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டதால் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் கடந்த 20ம் தேதி சவரன் ரு.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே தங்கம் விலை கடந்த 18ம் தேதி முதல் குறைந்தபடியே இருந்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இன்று அவர்களுக்கு கவலை தரும் விதமாக தங்கம் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, சவரன் ரூ.35,968க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.6 அதிகரித்து, சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,496க்கும், ஒரு சவரன் ரூ.35,968க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் ரூ.38,880க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை 67 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ,67,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏற்ற தாழ்வுடன் நிலவி வருவது நடுத்தர, ஏழை மக்களுக்களை இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. தங்கத்தின் விலை எப்போது குறையும் என்பது இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here